Search This Blog

Friday, September 18, 2020

மகாபாரதத்தில் ஓர் உள்ளுணர்வு...

 குருவே சரணம்/ குருவுக்கு வணக்கம்...


🌺🌺🌺🌺 🌺🌺🌺🌺 🌺🌺🌺


 ■ உள்ளுணர்வை குறிக்கும் கிரகம் குரு...


■ உள்ளுணர்வை குறிக்கும் பாவம் 9 ம் பாவம்...


 🔘 ஒரு பாவத்திற்கு குரு மூலபாவமாக வருவது அந்த பாவத்தை புனித தன்மையாக மாற்றும்....


🔘 நின்ற நட்சத்திரமாக வருவது ,அதன் நிகழ்வுகளை தர்மத்தை கொண்டு நிறைவேற்றும்...


🔘 நின்ற உபநட்சத்திரமாக வரும்.போது ..சம்பவங்களை மரியாதையுடன் நடத்தும் அல்லது முடித்து வைக்கும்...


🔹🔹🔹  🔹🔹🔹 🔹🔹🔹


சில யூகங்களை கொண்டு ஒரு ஆய்வு செய்வோம்...


ஒருவனுக்கு குருவே மூல பாவமாக அமைந்து நின்ற நட்சத்திரம்/ உப நட்சத்திரமாக குருவே அமைந்து , 9 ம் பாவங்களை கையில் வைத்து கொடுப்பினையை பெற்றால்...


அவன் இறை கொடுப்பினை பெற்ற மனிதனாக காட்சியளிப்பான்...


ஒருவேளை மேலே சொன்னபடி குரு 9 ம் பாவத்தை கையில் வைத்துக்கொண்டு தசை/ புத்தி/ அந்தரம்/ சூட்சமம் மேலும் கோச்சாரமும் குருவே வந்தால் அந்த குறிப்பிட்ட நாழிகையோ அல்லது அந்த நாள் அவனுக்கு பூரண இறை உணர்வு மற்றும் உள்ளுணர்வை நிச்சயம் தரும்.


அண்டமாய் இருக்கும் இறைவனே தடுத்தாலும் , ஜாதகனின் பிண்டத்தில் உள்ள இறை உணர்வு அவனுக்கு உள்ளுணர்வாய் வந்து வழிகாட்டும்....


இதை மகாபாரத கதையில் அர்ஜுனனுக்கு இறைவனே சொல்ல மறுத்தாலும் அவனுக்கு உள்ளுணர்வு எப்படி வேலை செய்கிறது என்பதை பார்ப்போம்....


பாரதப் போரில் கர்ணன் சேனாதிபதியாகி முதல் நாள் அர்ச்சுனனை நேருக்கு நேராக மோதுகிறான்..


இருவரும் முதலில் சம வீரத்தை வெளிப்படுத்துகிறார்கள்...

திடிரென்று அர்ஜுனனின் வேகம் குறைய ஆரம்பிக்கிறது...


அந்த நேரத்தில் கிருஷ்ணன் அர்ஜுனா என்னவாயிற்று உன் முழுபலத்தை பயன்படுத்தி கர்ணனை வீழ்த்து என கட்டளையிடுகிறார்...


அதற்கு அர்ச்சுனன் கிருஷ்ணா எனக்கு தலை சுற்றுகிறது... மயக்கம் வருவது போல் இருக்கிறது என கூறுகிறார்...


உன் மகனை ( அபிமன்யு) இரக்கம் இல்லாமல் கர்ணன் உட்பட அனைத்து கயவர்கள் ஒன்று சேர்ந்து கொன்றதை மறந்துவிட்டதா.. எடு கணையை அந்த கர்ணனின் தலையை வீழ்த்து என கோபமாக கூறுகிறார்...


அதற்கு அர்ஜுனன் அவன் முகத்தை பார்க்கும் போது எனது மூத்த அண்ணன் தர்மனை பார்ப்பது போல உள்ளது என சொன்னார்...


எதை கிருஷ்ணன் மறைக்க நினைத்தாரோ அதை அவனின் உள்ளுணர்வு கூறியது கண்டு மனதிற்குள்.. ஆச்சரியப்பட்டார்...கிருஷ்ணர்.


அர்ஜுனா என்ன இது குழப்பம்?  அவன் உன் எதிரி... 


சரி முகத்தை பார்க்காமல் அவன் நெஞ்சுக்கு குறிவை..என கட்டளையிட்டார்...


உடனே அர்ஜுனன்  அதையும் செய்தேன் அவன் மார்பை பார்க்கும் போது  என் இரண்டாவது அண்ணன் பீமனின் மார்பு போல உள்ளது மாதாவா ! நான் எப்படி அவனை கொல்ல முடியும்?


(உள்ளுணர்வின் (9)சிறப்பை கண்டு மீண்டும் வியக்கிறார் கிருஷ்ணன்...)


சரி தலையும் வேண்டாம் , மார்பும் வேண்டாம் ,


நீ தான் 360 பாகையில் அம்புகளை சுழற்றும் வீரனாயிற்றேதிருப்பி பாதங்களை பார்த்து அவன் தலைக்கு குறி வை...என முழக்கமிட்டார் கிருஷ்ணன்...


கடவுளே எனக்கு அங்கு தான் பிரச்சினையே... அவன் பாதங்களை பார்க்கும் போது,

நான் தினந்தோறும் வணங்கும் என் தாய் குந்தியின் பாதங்களை போன்று உள்ளது ..மாதவா!! என உருகினான்...


கிருஷ்ணன் நன்கு புரிந்துகொண்டார் ...இவன் தற்போது 9 ம் பாவத்தால் முழுமையாக 

ஆட்கொள்ளப்பட்டுள்ளான்..

இந்த நேரத்தில் சத்திரிய குணம் வேலை செய்யாது...


உடனே தேரை திருப்பினான்..

நாளை போர் செய்வோம் என்று....


இறைவனே  கூற மறுத்தாலும் ,உள்ளுணர்வு  சுட்டிக்காட்டும்..



ஜோதிட வகுப்பறை நிறுவனர்

சார ஜோதிட வகுப்புகளுக்கு தொடர்பு கொள்ளவும்..

9443984718

Sunday, February 9, 2020


 SUN SPEECH ABOUT THAT CHARACTER

🔘 I am Sun, a fiery planet made up of gasses

🔘 My diameter is nearly 100 times higher than earth’s diameter

🔘 I am recognized as the leader since all the planets revolve around me. Therefore, I represent all the leaders.

🔘 Father is the leader of a family. The lives of family members revolve around the father. Therefore, I represent father and male paternal ancestors

🔘 Similarly I represent, all the ruling class people like National leaders, political leaders, managers, chief officers.

🔘 I represent :- leadership, mental strength, honesty, ruling ability, administrative ability, individuality, profession and status/recognition, courageous outlook, prestige, ego, politics, government, power, ambition

🔘 I am the only planet with my own natural light. Other planets get this light only from me. I am the primordial source of brightness and this is what is reflected by other planets. Therefore, I represent vision, eyes, eyesight and vital organs i.e. head, brain, heart.

🔘 I also represent the overall framework in the human body in the form of bones.

🔘 I also represent body heat/temperature. It it to be understood that the variation in the temperature is the indication of abnormalities in the body which are sometimes shown as fever/cold etc. Therefore, I represent the doctors who cure sickness and also the medicines which support the doctors

🔘 To assess a horoscope, the ascendant house is the most critical aspect to be considered. This ascendant is determined only based on me i.e. rising up of me. Therefore, I have crucial role in determining the ascendant and the remaining 11 houses

🔘 I take pride and charge in determining the destiny of a person’s horoscope. Being incharge of determining the ascendant house, I am indirectly determine the destiny of other houses and also distribute the work assignments to other planets using my authority. This gives me the HERO status

🔘 Daytime, evening, rock, forest, lion, wheat, copper, red lotus, spicy food, red colour, ruby gem stone, Lord Shiva, East direction are my attributes.

🔘 Majority of the astrology texts represent me as a malefic/negative planet. However, if you dive deep into my attributes, you can notice that I am infact 75% benefic/positive.


&&&&&&& &&&   &&&&&&& &&&&&& &&&&& &&&&& &&&&&&&&& &&&&

MOON - SPEECH ABOUT THAT CHARACTER

🔘 I am moon. I revolve around the Earth as a natural satellite

🔘 Where I reside is considered as the Birth Star and also as an important house.

🔘 Only based on me, Dasha-Bhukti calculations are done.

🔘 I command the immediate next importance after Sun.

🔘 If "LIFE" is an attribute of "SUN", I represent the "BODY". This body only houses the life.(AATMA-SHARIRA COMPLIMENT)

🔘 Among all the planets, I am the fastest to finish my travel to all the houses. Therefore, I represent all the quick/short term actions and results.

🔘 Since I represent the "BODY", I also represent "FOOD" (Especially, cooked food, vegetables)

🔘 I represent "THOUGHTS". Therefore I am accredited with the title of "RULER OF THE MIND"

🔘 In terms of relationships, I represent Mother, motherly women, elderly women, mother in law, paternal aunt, sister in law, elder sister etc.

🔘 I am a watery planet, therefore I represent the colour white as well as food products such as milk, curd, rice etc. I also represent the blood in the human body for the same reason

🔘 I also represent the following non-materialistic attributes:-
- Calm Appearance
- Mental Instability
- Mental Breakdowns
- Mental Illness
- Cold Temperature
- Common Cold
- Other Cold Related Diseases
- Blood Pressure

🔘 I also represent the following additional attributes:-
Pearl, Aluminium, Lead(Plumbum), Aquatic animals, briskness, white silk, white cloud/umbrella, night time, fast food stalls, Goddess Parvati and all her representations.

MARS-  SPEECH ABOUT THAT CHARACTER

🔘 I am Mars.

🔘 In Astrology, I am addressed as the planet representing THE EARTH.

🔘 I represent partially developed/underdeveloped lands and immovable assets

🔘 I represent land based wars and disputes such as Itihasam Mahabharata. I also represent the sharp weapons used in the war such as Dharma's Spear, Nakula's divine scepter, Arjuna's arrows, Bheema's pointed tip mace. In modern day warfare, I represent the rifle and similar weaponry.

🔘 I represent the pain, bloody injuries, suffering, supression methods, accidents arising out of warfare.

🔘 I also represent police department, defence forces, fire fighting department and also its personnel who adorn the uniform and exhibit high levels of physical fitness and mental strength.

🔘 I will play a vital role for the women who await marriage/life partnership towards starting a family.

🔘 In general, my non-materialistic attributes are as follows:-
- Courage
- Short Temper
- Aggression
- Stubbornness
- Zero Acceptance to others
- Revolution
- Application of Physical Strength

🔘 When I am weakened, one can get affected with mental stress, lack of peace, anxiety etc.

🔘 When I am afflicted, one can get affected with debts, fights, disturbances, betrayal, black mail, posession of weapons, terrorism/extremist activity, corruption.

🔘 My other attributes are as follows:-
- Machinery
- Huge industries
- Equipment
- Civil works
- Heavy Vehicles
- Harmful wild animals
- Thornfilled plants
- Bushes/Shrubs
- Rocky paths
- Brass
- Red coral
- Spice (Like Chilli etc.)
- Lord Murugan

 MERCURY -  SPEECH ABOUT THAT CHARACTER

🔘 I am Mercury.

🔘 I represent the "ever-active" nature(Like ants) and expedition of tasks(Like electricity).

🔘 If a person is influenced by me, they will have high intelligence, well tuned/calculated mindset to accomplish the required goals and targets within a short timeframe.

🔘 Among all the planets, as I am the fastest to orbit around the Sun, I am celebrated as the intellectual one.

🔘 In case of two party arguments/disputes, they need me to arrive at an common agreement. I am the champion of peaceful resolutions.

🔘 For partner, I am the love letter
For students, I am Mathematics
For researchers/analysts, I am the data/statistics
For beauty, I am a poem

🔘 My "non-materialistic" include but not limited to writing works, information technology, advertisement, speed post, telegram, telephone, magazines, television, computers, novels, transportation.

🔘 In a human body, I represent the nervous system and sensory organs.

🔘 I also represent intellectual general knowledge, monthly instalments, high precision technical products, agreements/deals, expertise, Prince.

🔘 I am blessed with the ability of speaking multiple voices(mimicry).

🔘 Since I have an answer for everything, I can also be considered as the "WISE ONE"

🔘 I denote GREEN Colour.

🔘 I also represent repeated/multiple actions, agents, technical research, witty and thought provoking humour.

🔘 I am also well known for my flexibility and grammar/literature expertise.


JUPITER - SPEECH ABOUT THAT CHARACTER

🔘 I am Jupiter

🔘 I am the biggest planet in the Solar System. Therefore, I represent high quality humanitarianism and graciousness.

🔘 My attributes are mainly peace, tranquility, traditional values, justice, loyalty, righteousness, discipline, self control, advicing/mentoring/respecting others, god fearing etc.

🔘 In order for you to identify God, you need me. I will provide you the methods to do prayers and reach god under the mentorship of great scholars spread over various religious schools.
I am also the one responsble to create high quality teachers such as our very own Gurunathar Mr. A. Devaraj.

🔘 Among the nine planets, I am the one with the most positive nature.

🔘 All religious/spiritual journeys towards God are in my hands. In Nadi Astrology, I am considered as the planet denoting "LIFE" itself.

🔘 I denote YELLOW colour.

🔘 The reason for Ex Chief Minister of TAMIL NADU Kalaignar M Karunanidhi wearing an yellow shawl is due to my influence only.

🔘 Even though I am not the key planet for the "life partner" aspects, my strength (In transit periods) definitely influences and disctates the auspicious events for the married couple.

🔘 In metals, I denote the highly precious and ever worthy GOLD.

🔘 I also represent lawfulness, judges, courts, justice filled judgements and actions.

🔘 I am also the planet responsibile for the fats in the human body.

🔘 Other attributes of me are:-
- Ancestral Lineage
- Cleanliness
- Traditional Values
- Priests
- Religious Beliefs
- Temples
- Knowledge of Vedas/Shastras
- Meditative verses/sounds
- Educational institutions
- High Body Mass
- Banks
- Lord Dakshinamoorthy
- Elephant
- Councelors/Advisors

VENUS - SPEECH ABOUT THAT CHARACTER

🔘 I am Venus and I am considered more or less to be equal to Jupiter in terms of characteristics.

🔘 Jupiter represents eternal joy/pleasure whereas I represent short lasting joy/pleasrures.

🔘 I also represent attraction, beauty, glamour, feminine elegance, eminence and love.

🔘 Among the genders, women are more connected to the above attributes, especially young women. Therefore, I represent young women only.

🔘 I am responsible for an individual's own money, gold, valuable products, black money etc.

🔘 I represent the noble metal "silver" and attractive taste of "sweetness"

🔘 Since I am responsible for the intimate interaction between a man and a woman, I represent the male reproductive fluid that leads to conception.

🔘 Gender determining "hormones" are also my attribute.

🔘 My other attributes are:-
- Happy married life
- Lavish products
- Experiencing joy
- Impressive artists
- Decoration/Make Up
- Costume Designs
- Plush palaces
- Artistic Literature, Music, Drama, Dance
- Wife
- High Quality alcoholic beverages
- Diamond
- Goddess Mahalakshmi

SATURN - SPEECH ABOUT THAT CHARACTER

🔘 I am Saturn. I am the furthest planet among the nine planets in astrology.

🔘 Since I delay the works, I am called as the "Sluggish" planet.

🔘 I represent people who:-
- Speak negatively
- Highlight weaknesses
- Have deficiencies in the body
- Have inferiority complex
- Look older than their actual age

🔘 Since I delay the death for an individual, I am also considered for "life longevity" analysis.

🔘 I represent BLACK colour.

🔘 Low income group people (below poverty line), slaves who have very low confidence and work for others are also represented by me.

🔘 Just by the thought of me, I will influence an individual in such a way that, they will live in an unclean environment (as black colour represents dirt), they will reuse products which have been used and discarded by other people in the society, they will not even have a chance to step into the ruling class society.

🔘 Those who are rightly connected with me, will be made very hard working.

🔘 Only with the support of the hard working class of people, any profession/business/entrepreneurship can be successful. Therefore, I am also considered for "Profession" analysis.

🔘 Whereever my presence is there, pain, sadness, suffering are naturally guaranteed.

🔘 If Jupiter is for birth, I am for death.

🔘 Black metals and highly useful industrial metals like IRON are represented by me.

🔘 Barrenness among men and women are also driven by me i.e. I affect the ability to conceive a child.

🔘 My other attributes are:-
- Night shift jobs
- Lies
- Miserly nature
- Small change(coins etc.)
- Poverty
- Physical diasbility
- Getting cheated/conned
- Longing
- Calm domestic animals
- Low class society/groups
- Paralysis (Hemiplegia)
- Never Give up attidute/determinaton
- Prudence
- Losses
- Philosophy
- Inferior complex
- Blue Stone
- Lord Ayyanaar and similar gods who are debilitating and intimidating to the enemies

RAHU SPEECH ABOUT THAT CHARACTER

🔘 I am Rahu.

🔘 I do not have a separate house for myself. Therefore, I am considered as a "shadow" planet.

🔘 I play around with ghosts and spirits. I also punish people using witchcraft.

🔘 I am the head portion of the five headed snake, therefore I naturally enlarge and expand anything.

🔘Immense expansion/gigantic/jaw dropping appearances are connected with me. That is why ghosts and spirits are also expressed in gigantic proportions.

🔘 Like Saturn, I am also responsible for the barren nature of men and women.

🔘 Since I am expanded and gigantic, I represent the whole of the cosmos. Along with this, I am also responsible for foreign lands, languages and religions.

🔘 Since I am a shadow planet, I represent photography, cinema, electricity etc.

🔘 My other attributes are, prisons, air flow within the human body, rashes arising out of allergic reactions, huge vessels, foreign connections, import/export, exaggerated expressions and display, corruption techniques, non-conforming and non-standard activities

🔘 Cancer, breath, lungs abnormalities, elders, grandfather, grandmother, Goddess Durgai, Hessonite Garnet gem stone are also my other attributes.



KETU- SPEECH ABOUT THAT CHARACTER

🔘 I am Ketu.

🔘 I am like the Siamese twin of Rahu and therefore, I am also called as a shadow planet. But I do not express exaggeration like Rahu.

🔘 I am more reserved and low lying. I shrink, destroy and terminate everything.

🔘 Like how Rahu represents the head of the snake, I represent the tail of the same snake and hence I am the opposite of expansion i.e. contraction.

🔘 I am also celebrated as the "INNER KNOWLEDGE" planet because I do not talk or express much. I work in silence. Contrary to the English saying that says "EMPTY VESSELS MAKE MORE NOISE". I am silent and full of knowledge within.

🔘 Since I am connected to a snake also, I represent poision, chemical drugs and addictive drugs that are harmful to the human body.

🔘 In particular, I represent those drugs that are linked to experience a temporary bliss of salvation (Moksha)

🔘 Since breaking down of anything, destruction, termination, leeching away are my characters, I will directly represent anti nationalists who de-stabilize the country. Similarly, I also represent threatening protestors, explosives, fire crackers, broken down blue/black stones, acids, unlawful activities, hindrances and obstacles.

🔘 Sometimes, I am also considered for poverty, religious beliefs, philosophical knowledge and intelligence, salvation, the climax of vedas, mental strength

🔘 Mostly, I am considered for attaining knowledge through seclusion/separation, meditation and penance.

🔘 If I am badly afflicted, I cause ulcers and wounds.

🔘 Acids in the human body, medicine, vow of silence, witchcraft/sorcery/magic towards ill effects, contacts with the world of spirits etc. are my attributes.

🔘 I can cause a split in the society due to my extremist religious practices.

🔘 Since I love separation, I can also lead to a divorce.

🔘 I also represent high quality fake goods/products which cannot be proven so easily.

🔘 Among the gods, I represent Lord Ganesha, and among the precious gem stones, I represent Cats Eye or Lehsunia.

Thursday, February 6, 2020

கிரகங்கள் பேசுகின்றன

🔘 சூரியன்  எனும் நான்
 வாயுப்பொருட்களால் ஆன ஒரு நெருப்புக் கோளம் ஆவேன்..

 🔘 நான் உங்களது பூமியின் விட்டத்தைப் போல் சுமார் 10 மடங்கு அதிகம் ஆவேன்..

 🔘  என்னை மையமாக வைத்து அனைத்து கிரகங்களும் சுற்றி வருவதால் என்னை கிரகங்களின் தலைவன் என அழைக்கிறார்கள் ஜோதிட சான்றோர்கள்.

🔘 எனவே எல்லாவற்றிலும் முதன்மையானவர்களை என்னையே குறிக்கும்.

🔘 ஒரு குடும்பத்திற்கு தந்தை தான் தலைவர். தந்தையைச் சார்ந்தே குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் இருப்பார்கள்.

🔘 எனவே குடும்ப உறவில் தந்தையையும், தந்தை வர்க்கத்தினரையும் என்னையே குறிக்கும்.

🔘அதே போல் உங்களை ஆளும் அனைத்து நபர்களையும்  என்னையே குறிக்கும். அதாவது நாட்டுத் தலைவர்கள், கட்சித்தலைவர்கள், பணிபுரியும் இடத்தில் மற்றவர்களுக்கு வேலையை பிரித்துத் தரும் மேலதிகாரிகள் போன்றவர்களை சூரியன் குறிக்கும்.

🔘 எனவே தலைமை தாங்குதல், மனோதிடம், நேர்மை, ஆளுமைதிறன், நிர்வாக திறன், ஒருவருடைய தனித்தன்மை, உத்யோகம், அந்தஸ்து, கம்பீரமான தோற்றம், சுய கௌரவம், தான் என்ற கர்வம், அரசியல், அரசாங்கம், அதிகாரம், குறிக்கோள் போன்றவற்றுக்கு  நானே  காரகமாகும்.

🔘 கிரகங்களில் நான் மட்டுமே சுய ஒளியை கொண்டுள்ளேன்.
என்னிடம்  இருந்துதான் மற்ற கிரகங்களுக்கு ஒளி செல்கின்றது. என் ஒளியைத் தான் மற்ற கிரகங்கள் பிரதிபலிக்கின்றன. எனவே நம் உடலில் கண்களுக்கும், கண் பார்வைக்கும் காரகன் நானே ஆவேன்.
எனவே உடலில் முக்கிய உறுப்புகளுக்கு காரகன் நானே ஆவேன்.

🔘 அதாவது தலை, மூளை, இருதயம் போன்ற உறுப்புகளுக்கு காரகன் நானே .
அடுத்து உடலில் உள்ள முக்கிய உறுப்பு உடலில் உள்ள எழும்புகள் ஆகும். எனவே எலும்புகளுக்கு காரகனும் நான் தான். உடலில் உள்ள உஷ்ணத்திர்க்கும் நானே காரகன் ஆகும்.

🔘 உடலில் உள்ள உஷ்ணத்தின் மாற்றங்களினால் (ஏற்ற,இறக்கங்கள்) தான் நோய்கள் (காய்ச்சல்,ஜலதோஷம்) அதிகளவு வருகின்றன. எனவே நோய்களை குணப்படுத்தும் மருத்துவர்களையும், மருந்துப்பொருட்களும் நானே காரகங்கள் ஆவேன்

🔘ஒரு ஜாதகத்தில் பலனை நிர்ணயிப்பதில் லக்னமே பிரதானமானது. சூரியனின் நிலையினை (சூரிய உதயம்) கருத்தில் கொண்டே லக்னம் கணிக்கப்படுகின்றது. லக்னபாவத்தையும் மற்ற 11 பாவங்களையும் நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு அளிக்கிறேன்.

🔘அதாவது ஒருவரின் விதியை நிர்ணயிப்பது சூரியனே ஆகும். அதன்படி ஒவ்வொரு பாவத்தின் கொடுப்பினையை (லக்ன புள்ளியை நிர்ணயிப்பத்தின் மூலமாக) எனது நிர்ணயிப்பதினாலும் கிரகத்திற்கு வேலையை பிரித்துத் தர என்னுடைய அதிகாரம் பெறுவதாலும் நான் நவக்கிரகங்களில் கதாநாயக அந்தஸ்தை பெறுகிறேன்.

🔘பகற்பொழுது, மாலை, பாறை, காடு, சிங்கம், கோதுமை, தாமிரம், செந்தாமரை, சுவைகளில் காரம், சிவப்பு, நிறம், மாணிக்கம், சிவபெருமான், கிழக்கு திசை போன்றவை எனது காரகங்களாகும்.

🔘 பெரும்பாலான ஜோதிட நூல்களில் என்னை அசுப கிரகமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக என்னுடைய காரகங்களை சற்று உற்று நோக்கினால் அதில் சுப தன்மைகளே அதிகம் என்பதால் என்னை 75% சுபமாகவே நாம் எடுத்துக்கொள்ளலாம்.

சந்திரன்  பேசுகிறேன்

🔘 சந்திரன் எனும் நான் பூமியை மையமாகக் கொண்டு பூமியை சுற்றி வருகிறேன்.

🔘 நான் ஒரு ஜாதகத்தில் எந்த ராசியில் உள்ளனோ, அந்த ராசியை தான் ஜென்மராசி என்று  கூறுவார்கள்

🔘 நான்  எந்த நட்சத்திரத்தில் உள்ளனோ அதுதான் ஜென்மநட்சத்திரம் என்பார்கள்.

🔘 என்னை வைத்துதான் தசா-புத்திகள் கணக்கீடு செய்கின்றார்கள்

🔘 சூரியனுக்கு அடுத்த படியாக நட்சத்திர அந்தஸ்தினைப் பெரும் கிரகம் நானே  ஆவேன்.

🔘 சூரியன் உயிருக்கு காரகர் என்றால் ,நான் அந்த உயிரை வைத்திருக்கும் உடலுக்கு காரகர் ஆவேன்.

🔘கிரகங்களிலேயே ராசிமண்டலத்தை மிக வேகமாக சுற்றிவரும் கிரகம் நானே ஆவேன். எனவே விரைவான செயல்களுக்கு நானே காரகன் ஆவேன்.

🔘 நான் உடலுக்கு காரகன் என்பதால் எல்லா உணவு பொருட்களுக்கும் (சமைத்த உணவுகள், காய்கறிகள்) நானே காரகன் ஆவார்.

🔘 சிந்தனைகளுக்கு நானே காரகன் ஆவேன். எனவே எனக்கு மனோ காரகர் என்றும் பெயர்.

🔘 உறவு முறைகளில் என்னை,தாயையும், தாய் வர்க்கத்தையும், தாயை போன்று வயதில் மூத்த பெண்களான மாமியார், அத்தை,அண்ணி, மூத்த சகோதரி ஆகியோரையும் குறிக்கும் காரகர் ஆவேன்

🔘 நான்  நீர் கிரகம் என்பதாலும் வெண்மை நிறத்திற்கு காரகர் என்பதாலும் உணவுப் பொருட்களில் பால், தயிர், அரிசியைக் குறிக்கும்.

மற்றும் சந்திரன் உடலில் உள்ள நீர் தன்மையான இரத்தத்திற்கும் காரகர் ஆவேன்

🔘 மேலும் அமைதியான தோற்றம், மனக்குழப்பங்கள், மன பேதலிப்பு, பைத்தியம், குளிர்ச்சி, சளி, சிலேத்தம, சீதள நோய்கள்,
இரத்த அழுத்த நோய்களுக்கும் நானே காரகம் ஆவேன் ,

🔘 முத்து, அலுமினியம், ஈயம், நீர்வாழ் உயிரினங்கள், சுறுசுறுப்பு, வெண்பட்டு, வெண்குடை, இரவுப்பொழுது, உணவு விடுதிகள், தெய்வங்களில் பார்வதி அம்சம் போன்றவைகளுக்கு நானே காரகர் ஆவேன்

செவ்வாய் பேசுகிறேன்

🔘 ஜோதிடத்தில் பூமிக்காரகன் என்று என்னை அழைப்பார்கள்

🔘  முழுவதும் கட்டி முடிக்கப்படாத   காலி நிலம், அசையா சொத்துக்கள், போன்றவற்றுக்கு நானே  காரகன் ஆவேன்.

🔘 பாரதத்தில் கூட நிலத்தின் மூலமான சண்டை – சச்சரவுகள், போர் என வந்தது,அதற்கு காரணமே நான் தான்.

🔘 பாரதபாபோரில் பயன்படுத்தப்படும்  தர்மனின் ஈட்டி,  நகுலனின் வேல், அர்ஜுனனின் அம்பு  ,பீமனின் கதாயுதம் போன்ற கூர்மையான ஆயுதங்கள், இரானுவத்தில் உள்ள துப்பாக்கி போன்றவைகளுக்கு நானே காரகன்..

🔘  போரினால் ஏற்படும் காயங்கள், வலி, வேதனை, அடக்கு முறைகள், விபத்து போன்றவற்றுக்கும் நானே காரகமாவேன் .

🔘 நாட்டை பாதுகாக்கும் காவல்துறை, இராணுவம், தீயணைப்புத்துறை போன்ற சீருடை அணிந்த உடல் வலிமை, மனவலிமை உள்ளவர்கள் பணியாற்றும் துறைகளுக்கும், அதில் உள்ளவர்களுக்கும் நானே காரகம் ஆவேன்..

🔘 வீரத்தை விரும்பும் எல்லா பெண்களுக்கும் களத்திர காரகரானாக இருப்பேன்

🔘  நான் பொதுவாக தைரியம், முன்கோபம், முரட்டுத்தனம், பிடிவாதம், மற்றவருக்கு கட்டுப்படாமை, புரட்சி செய்தல், உடல் வலிமையை பயன்படுத்துதல்,  ரண வேதனையை உண்டாக்குதல் போன்றவற்றுக்கு நானே காரணமாக இருக்கிறேன்.

🔘 நான் வலு குறையும் போது மன உளைச்சல், அமைதியின்மை, பதற்றம் போன்றவற்றுக்கும் நானே காரகன் ஆகிறேன்..

 🔘 நான் கெடும் போது கடன், வழக்கு, சண்டை, சச்சரவுகள், துரோகம், மற்றவர்களால் மிரட்டப்படுதல் (Black Mail) , ஆயுதங்கள் வைத்திருத்தல், தீவிரவாதம், ஊழல் போன்றவற்றுக்கும் காரகமாகி விடுகிறேன்.

🔘 இயந்திரங்கள், பெரிய தொழிற்சாலைகள், கருவிகள், கட்டுமான தொழில்கள், கனரக வாகனங்கள், ஆபத்தான கொடிய விலங்குகள், முட்செடிகள், புதர்கள், கரடு முரடான பாதைகள், செம்பு, பவளம், உணவு பொருட்களில் காரம் (மிளகாய் போன்றவை), தெய்வங்களில் முருகன் போன்றவற்றுக்கும் நானே காரகமாகிறேன்..

புதன் பேசிகிறேன்

🔘 எறும்புகள் போல சுறுசுறுப்புக்கும்,  மின்சாரம் போல விரைந்து ஒரு செயலை முடிப்பதற்கும் நானே காரகன் ஆவேன்.

 🔘 என்னுடைய ஆதிக்கம் கொண்டவர்கள் புத்தி கூர்மை உடையவர்கள்,
 சமயோஜித சிந்தனையுடன் செயல்பட்டு எந்த ஒரு செயலையும் விரைவாக முடிப்பார்கள்.

🔘 கிரகங்களில் சூரியனை மற்ற கிரகங்களை விட விரைவில் நான்  சுற்றி விடுவதால், என்னை புத்திகாரகர் என்று அழைக்கிறார்கள் பெரியவர்கள்..

🔘 இரண்டு தரப்பு சண்டை இட்டுக்கொண்டால் சமாதானத்திற்கும், நடுநிலைக்கும் என்னை தான் அழைப்பார்கள் .

🔘 காதலிக்கு கவிதை எழுதுவது, மாணவர்களுக்கு கணிதத்தை தருவது , ஆய்வாளர்களுக்கு  புள்ளி விபரம் தருவது ,  அழகிய சிற்பங்களையை காவியமாக என எல்லாமே நான் தான்..

🔘  நான் வேகமாக ஓடுவதால் எழுத்து, தகவல் தொடர்பு, விளம்பரம், அஞ்சல், தந்தி, தொலைபேசி, தொலைக்காட்சி, பத்திரிக்கை, கம்ப்யூட்டர், நூல்கள், போக்குவரத்து போன்றவற்றை என் முதுகிலே ஏற்றி விடுகிறார்கள்...

🔘 உங்களை இயங்க வைக்கும் நரம்பு மண்டலங்களுக்கும், உணர்வு புலன்களுக்கும் நானே காரகன் ஆவேன்.

🔘 நான்  சமாதானம் செய்வதில் வல்லவன்,

🔘 அறிவு பூர்வமான நுட்பமான பொது அறிவு, மாதம் மாதம் செலுத்தும் தவணை முறை, நுட்பமான பொருட்கள், ஒப்பந்தம், நிபுணத்துவம், இளவரசன்,
என எல்லாமே நான் தான்...

🔘 ரஜினி ,விஜயகாந்த் ,
வைரமுத்து என பல குரலில் பேசும் திறன் பெற்றவன் நான்..

🔘 நீங்கள் எப்படி பேசினாலும் என்னால் பதில் தர முடியும்.. ஆதலால் நான் விகடகவி,

🔘 என்னை பச்சை நிறம் என சொல்லுவார்கள்
, ஒரு முறைக்கு இரு முறை செய்யும் இரட்டைத் தன்மை, பிரதிநிதிகள் (Agent) நுட்பமான ஆராய்ச்சி, சிந்திக்கத் தூண்டும் நகைச்சுவைகள் என அனைத்தும் நானே...

🔘  வீரியத்தை விட காரியம் தான் முக்கியம் என எல்லாவற்றுக்கும் வளைந்து கொடுக்கும் தன்மை, இலக்கணப் புலமை, உலோகங்களில் பித்தளை போன்றவற்றுக்கும் நானே காரகன்.

குரு பேசிகிறேன்...

🔘 சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில் மிகப்பெரிய கிரகம் நான் தான்.

🔘  ஆதலால் பெரிய மனிதத் தன்மைக்கு காரகர் ஆவேன்.

🔘 தெய்வத்திற்கு இணையான குணங்களான  சாந்தம், பண்பாடு, நீதி, நேர்மை, தர்ம சிந்தனை, ஒழுக்கம், கட்டுப்பாடு, பிறருக்கு நல்ல ஆலோசனையைத் தருவது, மற்றவரை மதித்தல், தெய்வ நம்பிக்கை  போன்றவற்றிக்கு நானே காரகமாவேன்.


🔘 இறைவனை சுட்டிக்காட்ட நான் தேவை  ,உங்களுக்கு வழிகாட்டும் ஜோதிட நல்லாசிரியர் அ.தேவராஜ் ஐயா போன்றவர்களை உருவாக்குவது நானே, இறைவனை எப்படி உணர்வது ,எப்படி பூஜைகள் செய்வது என உங்களுக்கு அறிவுரை கூறும் மடாதிபதிகளும் நானே

🔘  நவகிரகங்களில் என்னுடைய காரகங்களில் அதிக அளவில் சுப காரகங்களே உள்ளன.

🔘 தெய்வீக சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களுக்கும், நானே காரகர். அடிப்படை ஜோதிடமான நாடி ஜோதிடத்தில் என்னை ஜீவ காரகன் என்று முனிவர்கள் கூறி இருக்கின்றார்கள்.

🔘 என்னை  மஞ்சள் நிறத்திற்கும் காரகர் என கூறுவார்கள் .
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மஞ்சள் துண்டு போடுவதற்கு நானே காரணம்


🔘ஆண், பெண் இருவருக்கும் நான்  களத்திர காரகனாக இல்லாவிட்டாலும் கூட நான் பலம் பெற்று இருப்பது (கோட்சாரத்தில்) திருமணம் போன்ற சுபநிகழ்ச்கிகளுக்கு அவசியமான ஒன்று.

🔘உலோகங்களில் மஞ்சள் நிறத்தில் உள்ளதும், விலை உயர்ந்ததுமான ( தனகாரகன்) தங்கத்திற்கு நானே காரகர் ஆகிறேன்.

🔘நான்  நேர்மைக்கு காரகர் என்பதால் சட்டம் – ஒழுங்கு, நீதிபதிகள், நீதிமன்றம், நேர்மையான சட்ட நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு நானே காரகர் ஆவேன்.

🔘 உடலை பெரியதாக்கும் கொழுப்பு சத்திற்கும் நானே காரகர் ஆவேன்.

🔘பூர்வீகம் ஆச்சாரம்(சுத்தம்), பாரம்பரியம், புரோகிதம், மத நம்பிக்கை, கோவில், சாஸ்திர ஞானம், மந்திர உச்சாடனங்கள், கல்வி நிறுவனங்கள், பருத்த உடல், கருவூலம் (வங்கிகள்), தெய்வங்களில் தட்சிணாமூர்த்தி, விலங்குகளில் மிகப்பெரிய உருவத்தை கொண்ட யானை, ஆலோசனைகளை கூறுபவர்கள் போன்றவை எனது காரகங்களாகும்.

சுக்கிரன் பேசுகிறேன்...

🔘 குருவிற்கு இணையானவன் நான் ,
கிரகங்களில் குரு பேரின்ப காரகன் என்றால், அதற்கு நேர்மாறாக சிற்றின்ப விஷயங்களுக்கு நானே காரகர் ஆவேன்.

🔘 பிறர் மயங்கும் அழகு, அதித கவர்ச்சி, பெண்களுக்கே உரித்தான நளினம், மென்மை, காதல் போன்றவற்றுக்கு நானே காரகர் ஆவேன்.

🔘இரு பாலினத்தில் ஆண்களை விட பெண்களிடத்தில் தான் அழகு, கவர்ச்சி, மென்மை போன்றவை அதிகம் (குறிப்பாக இளம் பெண்களிடத்தில்) என்பதால் நான்  இளம் பெண்களை மட்டுமே குறிப்பேன்...

🔘 ஒருவரிடம் உள்ள சொந்த பணத்திற்கும், பொன் பொருட்களுக்கும், கறுப்பு பணத்திற்கும் (பொதுப்பணம் என்றில்லாமல்) நானே காரகர் ஆகின்றார்.

🔘 வெள்ளிக்கு நானே காரகம் . அருசுவைகளில் நம்மை மயக்கும் இனிப்பு சுவைக்கு காரகரும் நானேதான் ஆவேன்.

🔘 நான் பாலின இன்பங்களுக்கு காரகர் என்பதால் ஆண், பெண் உறவுகளின் பொது வெளிப்படும் குழந்தை உற்பத்தியை கொடுக்கும் விந்து விற்கும் நானே காரகம்..

🔘ஆண், பெண் பாலின வேறுபாடுகளை (இனக்கவர்ச்சி) ஒருவருடைய உடலில் உள்ள ஹர்மோன்கள் நிர்ணயிக்கும்.எனவே ஹார்மோன்களுக்கும் நானே காரகர் ஆகின்றேன்..

🔘 மேலும் மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை, ஆடம்பர பொருட்கள், இன்பங்களை நுகருதல், மற்றவர்களை மயக்கும் கலைஞர்கள், ஒப்பனை, ஆடை அலங்காரங்கள், சொகுசு மாளிகைகள், இயல், இசை, நாடகங்கள், நடனங்கள், உறவு முறையில் மனைவி, உயர் ரக மதுபான வகைகள், வைரம், தெய்வங்களில் மஹாலட்சுமி போன்றவை என்னுடைய காரகங்களாகும்.

சனி பேசுகிறேன்

🔘 நவகிரகங்களிலேயே தொலைவில் உள்ள கிரகம் நானே ஆவேன் .

🔘 கொடுத்த வேலையை குறிப்பிட்ட நேரத்தில் செய்யாமல் கொஞ்சம் காலம் தாமதமாக செய்வதால் என்னை மந்த காரகன் என பெயரிட்டு விட்டனர்.

🔘 எதிர்மறையாக பேசுபவர்கள் , பலவீனத்தை சொல்லுபவர்கள் , உடல் குறைபாடு உள்ளவர்கள், தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள், வயதான தோற்றமாக காட்டிக் கொள்பவர்கள் , இவர்கள் அனைவருக்கும் நானே காரகன்.

🔘 உடலை விட்டு உயிர் பிரியும் காலத்தையும்  தாமதப்படுத்திக் கொண்டே நான் இருப்பதால் என்னை  ஆயுள் காரகன் என்று பெயர் வைத்தனர் சான்றோர்கள்.

🔘 நான்  இருட்டு நிறமாகவே இருக்கும். இருட்டு என்பது கரிய நிறம் என்பதால் கரிய நிறத்திற்கு காரகர் நானே..

🔘 அடித்தட்டு மக்கள், மற்றவருக்கு கீழ்படிந்து நடப்பவர்களாகவும், தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருப்பதற்கு நானே காரகன்.

🔘 என்னை நினைத்தாலே அவர்களை அழுக்கு நிறைந்த பகுதிகளில் வசிப்பவர்களாகவும் (கருப்பு நிறமும் அழுக்கினைக் குறிக்கும்), மற்றவர்கள் பயன்படுத்திய பொருட்களைப் பயன்படுத்துபவர்களாகவும், ஆளும் வர்க்கத்தினரை எளிதில் காண முடியாதவர்களாகவும் மாற்றி விடுவேன்.

🔘என்னை வலுவாக பிடித்தவர்களை,  கடினமான உழைப்பவர்களாக உருமாற்றம் செய்வேன்.

🔘வேலைகாரர்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே தொழிலை சிறப்பாக நடத்த முடியும் என்பதால் எனக்கு தொழில் காரகன் என்றும் பெயர் வைத்தனர்.

🔘  நான் இருக்கும் வீட்டில் எது இருக்கிறதோ இல்லையோ  துக்கங்களும், வலி, வேதனைகளும் இருக்கும்.

🔘பிறப்புக்கு குரு என்றால்  இறப்பிற்கு நான் காரணம்

🔘 உலோகங்களில் கருப்பு நிறம் கொண்டதும், தொழில்களுக்கு அதிகம் பயன்படுவதுமான இரும்பும் என்னுடைய காரகமே ஆகும்.

 🔘 ஆண், பெண் மலட்டுத்தன்மைக்கும் நானே காரகன்.

🔘 ஊரே தூங்கும் இரவு வேலையில் பணி புரிவது, பொய், கஞ்சத்தனம், சில்லறை, வறுமை, ஊனம், ஏமாறுதல், ஏக்கம், அமைதியான வீட்டு விலங்குகள், தாழ்ந்த ஜாதி, பக்கவாதம், விடாமுயற்சி, விவேகம், இழப்பு, தத்துவம், தன்நிலை தாழ்தல், நீலக்கல், தெய்வங்களில் ஐய்யனார் போன்ற நீச்ச தெய்வங்கள் போன்றவைகளுக்கும் நானே காரகர் ஆவேன்.

ராகு பேசுகிறேன்

🔘எனக்கென்று தனி வீடு இல்லை ,என்னை நிழல் கிரகமாக மாற்றி விட்டனர்.

🔘  நிழல் கிரகம் என்பதால், கண்ணுக்குப் புலனாகாத ஆவிகளோடு பேசுவேன் ,
 பேய், பிசாசுகளோடு விளையாடுவேன்,
 மாந்திரீகம் செய்து பிறரை தண்டிப்பேன்.

 🔘 ஐந்து தலை பாம்பின் தலை பகுதி நான் ஆதலால்   எதையும் பெரிதுபடுத்துவதே எனது  காரகம் என முன்னோர்கள் கூறுகின்றார்கள்.

🔘 பிரம்மாண்டம் அல்லது விகாரம் என்பது எனது தோற்றமே .

🔘பேய், பிசாசுகள் போன்றவைகள் விகாரமானவைகளாக சித்தரிக்கப்படுகின்றன.

🔘 சனியை போலவே நானும் மலட்டுத்தன்மைக்கு காரணம்

🔘நான் பிரம்மாண்டம் என்பதால் இந்த பிரபஞ்சம் முழுவதையும் குறிக்கும் கிரக காரகன் ஆவேன்.
எனவே வெளிநாட்டையும், அந்நிய மதங்களையும், அந்நிய மொழிகளையும் பேசுவேன் .

🔘 நிழல் கிரகம் என்பதால் போட்டோ, சினிமா, மின்சாரம் போன்றவற்றிற்கும் நானே காரகன் ஆவேன்


🔘 சிறைச்சாலை, உடலில் உள்ள சுவாசம், அலர்ஜியால் உடலில் ஏற்படும் தடிப்புகள் (விகாரம்), அகன்ற பாத்திரங்கள், வெளிநாட்டுத் தொடர்பு, ஏற்றுமதி, இறக்குமதி, எதையும் மிகைப்படுத்தி சித்தரித்தல், மோசடி வித்தைகள், வழக்கத்திற்கு மாறான செய்கைகள் எல்லாம் நான் தான் செய்ய வைப்பேன்.

🔘புற்றுநோய் மூதாதையர்கள், தாத்தா, பாட்டி,
தெய்வங்களில் துர்க்கை, ரத்தினங்களில் கோமேதகம் போன்றவை எனது  காரகங்களாகும்.

கேது  பேசுகிறேன்...

🔘 ராகுவும் நானும் ஒட்டி பிறந்தவர்கள், ஆதலால் நானும் ஒரு நிழல் கிரகம் ஆகும்.

🔘  ஆனால் நான் அவனைப் போன்று  பெரிதாக காட்டிக்கொள்ள மாட்டேன்.

🔘 அடக்கமானவன் எதையும் சிறியதாக்குவது, சிதைப்பது மற்றும் துண்டிப்பது போன்ற காரகங்களை கொண்டுள்ளேன்.

🔘 அவன் பாம்பின் தலைப்போல் பெரியதாக உள்ளவன் நானோ பாம்பின் வாலைப்போல் சிறுமைப்படுத்திக் கொண்டு சிறியதாக உள்ளவன் அதுவே எனது காரகம் ஆகும்.

🔘  என்னை ஞானகாரகன் என்று நம் முன்னோர்கள் கூறுகின்றார்கள். காரணம் அதிகம் பேசாமல் இருப்பதால் தான்...

🔘 பாம்பு என்பதால் ராகுவைப் போன்று நானும் விஷங்களையும், போதை பொருட்களையும் குறிப்பேன்

🔘 குறிப்பாக போதை பொருட்களில் அபின், கஞ்சா போன்றவை எனது காரகங்களாகும். இது ஒரு வகையில் மோட்சம் எனும் மயக்கத்தை குறிப்பதால் எனக்கு பிடிக்கும்...

🔘 எந்த பொருளையும் உடைப்பது, சிதைப்பது, துண்டிப்பது, அரிப்பது என்பது என்னுடைய காரகம் என்பதால் நாட்டை சீர்குலைப்பவர்களுக்கும், கலக காரர்களுக்கும், மிரட்டல் விடுபவர்களுக்கும், வெடிகுண்டு, பட்டாசு, ஜல்லி, அமிலம் எல்லாவித சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்கும், எல்லாவித தடைகளுக்கும் என்னையே குற்றம் சாட்டுகிறார்கள்...

🔘 எனது நிலைமை சில நேரங்களில் ஏழ்மை, மத நம்பிக்கை, தத்துவ ஞானம், மோட்சம், வேதாந்தம், மனோபலத்தை குறிக்கும்.

🔘 பல நேரங்களில் இந்த மனிதர்களை பிடிக்காமல் தனிமையில் இருந்து தவம் செய்து என் ஞானத்தை பெருக்குவேன்.

 🔘 நான் எங்கேயாவது அடிப்பட்டு விட்டால் புண்கள், ரணங்களை ஏற்படுத்தும் ...

🔘 உடலில் உள்ள அமிலம், மருத்துவம், மௌன விரதம், பில்லி சூனியம், மாந்திரீகம், ஆவியுலக தொடர்புகளை நானே செய்வேன்.

🔘 மத வெறியனாக இருப்பேன் ஆதலால் பிரிவினை வாதம் ஏற்படும்..

🔘  தனிமை விரும்பி என்பதால் விவாகரத்து ஏற்படும்,
 🔘எளிதில் கண்டுபிடிக்க முடியாத போலிகளை உருவாக்குபவன் நான்

 🔘 தெய்வங்களில் விநாயகர், நவரத்தினங்களில் வைடூரியம் போன்றவை நானே காரகமாவேன்.