குருவே சரணம்/ குருவுக்கு வணக்கம்...
🌺🌺🌺🌺 🌺🌺🌺🌺 🌺🌺🌺
■ உள்ளுணர்வை குறிக்கும் கிரகம் குரு...
■ உள்ளுணர்வை குறிக்கும் பாவம் 9 ம் பாவம்...
🔘 ஒரு பாவத்திற்கு குரு மூலபாவமாக வருவது அந்த பாவத்தை புனித தன்மையாக மாற்றும்....
🔘 நின்ற நட்சத்திரமாக வருவது ,அதன் நிகழ்வுகளை தர்மத்தை கொண்டு நிறைவேற்றும்...
🔘 நின்ற உபநட்சத்திரமாக வரும்.போது ..சம்பவங்களை மரியாதையுடன் நடத்தும் அல்லது முடித்து வைக்கும்...
🔹🔹🔹 🔹🔹🔹 🔹🔹🔹
சில யூகங்களை கொண்டு ஒரு ஆய்வு செய்வோம்...
ஒருவனுக்கு குருவே மூல பாவமாக அமைந்து நின்ற நட்சத்திரம்/ உப நட்சத்திரமாக குருவே அமைந்து , 9 ம் பாவங்களை கையில் வைத்து கொடுப்பினையை பெற்றால்...
அவன் இறை கொடுப்பினை பெற்ற மனிதனாக காட்சியளிப்பான்...
ஒருவேளை மேலே சொன்னபடி குரு 9 ம் பாவத்தை கையில் வைத்துக்கொண்டு தசை/ புத்தி/ அந்தரம்/ சூட்சமம் மேலும் கோச்சாரமும் குருவே வந்தால் அந்த குறிப்பிட்ட நாழிகையோ அல்லது அந்த நாள் அவனுக்கு பூரண இறை உணர்வு மற்றும் உள்ளுணர்வை நிச்சயம் தரும்.
அண்டமாய் இருக்கும் இறைவனே தடுத்தாலும் , ஜாதகனின் பிண்டத்தில் உள்ள இறை உணர்வு அவனுக்கு உள்ளுணர்வாய் வந்து வழிகாட்டும்....
இதை மகாபாரத கதையில் அர்ஜுனனுக்கு இறைவனே சொல்ல மறுத்தாலும் அவனுக்கு உள்ளுணர்வு எப்படி வேலை செய்கிறது என்பதை பார்ப்போம்....
பாரதப் போரில் கர்ணன் சேனாதிபதியாகி முதல் நாள் அர்ச்சுனனை நேருக்கு நேராக மோதுகிறான்..
இருவரும் முதலில் சம வீரத்தை வெளிப்படுத்துகிறார்கள்...
திடிரென்று அர்ஜுனனின் வேகம் குறைய ஆரம்பிக்கிறது...
அந்த நேரத்தில் கிருஷ்ணன் அர்ஜுனா என்னவாயிற்று உன் முழுபலத்தை பயன்படுத்தி கர்ணனை வீழ்த்து என கட்டளையிடுகிறார்...
அதற்கு அர்ச்சுனன் கிருஷ்ணா எனக்கு தலை சுற்றுகிறது... மயக்கம் வருவது போல் இருக்கிறது என கூறுகிறார்...
உன் மகனை ( அபிமன்யு) இரக்கம் இல்லாமல் கர்ணன் உட்பட அனைத்து கயவர்கள் ஒன்று சேர்ந்து கொன்றதை மறந்துவிட்டதா.. எடு கணையை அந்த கர்ணனின் தலையை வீழ்த்து என கோபமாக கூறுகிறார்...
அதற்கு அர்ஜுனன் அவன் முகத்தை பார்க்கும் போது எனது மூத்த அண்ணன் தர்மனை பார்ப்பது போல உள்ளது என சொன்னார்...
எதை கிருஷ்ணன் மறைக்க நினைத்தாரோ அதை அவனின் உள்ளுணர்வு கூறியது கண்டு மனதிற்குள்.. ஆச்சரியப்பட்டார்...கிருஷ்ணர்.
அர்ஜுனா என்ன இது குழப்பம்? அவன் உன் எதிரி...
சரி முகத்தை பார்க்காமல் அவன் நெஞ்சுக்கு குறிவை..என கட்டளையிட்டார்...
உடனே அர்ஜுனன் அதையும் செய்தேன் அவன் மார்பை பார்க்கும் போது என் இரண்டாவது அண்ணன் பீமனின் மார்பு போல உள்ளது மாதாவா ! நான் எப்படி அவனை கொல்ல முடியும்?
(உள்ளுணர்வின் (9)சிறப்பை கண்டு மீண்டும் வியக்கிறார் கிருஷ்ணன்...)
சரி தலையும் வேண்டாம் , மார்பும் வேண்டாம் ,
நீ தான் 360 பாகையில் அம்புகளை சுழற்றும் வீரனாயிற்றேதிருப்பி பாதங்களை பார்த்து அவன் தலைக்கு குறி வை...என முழக்கமிட்டார் கிருஷ்ணன்...
கடவுளே எனக்கு அங்கு தான் பிரச்சினையே... அவன் பாதங்களை பார்க்கும் போது,
நான் தினந்தோறும் வணங்கும் என் தாய் குந்தியின் பாதங்களை போன்று உள்ளது ..மாதவா!! என உருகினான்...
கிருஷ்ணன் நன்கு புரிந்துகொண்டார் ...இவன் தற்போது 9 ம் பாவத்தால் முழுமையாக
ஆட்கொள்ளப்பட்டுள்ளான்..
இந்த நேரத்தில் சத்திரிய குணம் வேலை செய்யாது...
உடனே தேரை திருப்பினான்..
நாளை போர் செய்வோம் என்று....
இறைவனே கூற மறுத்தாலும் ,உள்ளுணர்வு சுட்டிக்காட்டும்..
ஜோதிட வகுப்பறை நிறுவனர்
சார ஜோதிட வகுப்புகளுக்கு தொடர்பு கொள்ளவும்..
9443984718
No comments:
Post a Comment